அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஜோபைடன் உரை; பல லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்க இருப்பதாக திட்டவட்டம்

0 986
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஜோபைடன் உரை; பல லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்க இருப்பதாக திட்டவட்டம்

மெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்போம் என்று உறுதியளித்துள்ள அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், பொருளாதார மீட்புக்கான நிதி உதவி திட்டங்களை அறிவித்தார்.

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை கூட்டுக் கூட்டத்தில் முதன் முறையாக அவர் உரை நிகழ்த்தினார். மாணவர்கள், குழந்தைகள், குடும்பங்களின் நலனுக்காக 1 புள்ளி 8 டிரில்லியன் டாலர் நிதியளிக்கப்படும் என்றும் ஜோ பைடன் அறிவித்தார்.

ஏற்கனவே 2 டிரில்லியன் டாலர் பொருளாதார மீட்பு நிதியை ஜோ பைடன் அறிவித்திருந்த நிலையில் கூடுதலாக இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க தாம் உறுதி கொண்டிருப்பதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.

காவல் அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்பின இளைஞர் பிளாயிட் குறித்து தமது உரையில் குறிப்பிட்ட ஜோ பைடன், காவல்துறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

அமெரிக்காவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன் அமெரிக்கர்களின் நலன்களைப் பாதுகாக்க தமது அரசு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments