இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு கொரோனா உறுதி..! 3645 பேர் கொரோனாவுக்கு பலி

0 2986
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு கொரோனா உறுதி..! 3645 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து விடுபட்டு நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எனினும் 30 லட்சத்து 84 ஆயிரத்து 814 பேர் தொற்று பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த புள்ளிவிவரத்தையும் சேர்த்தால், நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 4 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments