வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, சுமார் 13ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக பேனர்

0 14860
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, சுமார் 13ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக பேனர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர், உடனடியாக அகற்றப்பட்டது.

காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெள்ளக்கோவில் சாமிநாதனும், அதிமுக சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கமும் போட்டியிட்டனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் சுமார் 13ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பழையக்கோட்டைபுதூர் பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அலுவலருக்கு தகவல் அளித்த நிலையில், பேனர் உடனடியாக அகற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments