கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை..!

0 4192
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை..!

மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தினார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,தேனி, திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.

இதேபோல, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இந்த ஆலோசனையில் பங்கேற்றார். சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கொரோனா பரவலைத் தடுக்க மே மாதம் ஊரடங்கில் ஏற்படுத்த வேண்டிய கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments