ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை..! புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்

0 4089
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை..! புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 61 ரன்களும், கேப்டன் வார்னர் 57 ரன்களும் குவித்தனர்.

தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கைக்வாட் 75 ரன்களும், பாப் டூ பிளிஸ்சிஸ் 56 ரன்களும் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.18 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments