மேற்கு வங்கத்தில் 35 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது..!

0 1176
மேற்கு வங்கத்தில் 35 தொகுதிகளில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு..! வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

மேற்கு வங்கத்தில் 35 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை முதலே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் திரண்டிருந்தனர். கொரோனா தடுப்பு அறிவுறுத்தல்களின்படி வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பலத்த பாதுகாப்புடன் காலையிலேயே காசிபுரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

மொத்தம் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏழு கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.இதில் 283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மே 2 ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments