18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவின்போது ஓடிபி, தடுப்பூசி போடும் தேதி வரவில்லை என புகார்? :மத்திய அரசு விளக்கம்

0 1879
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவின்போது ஓடிபி, தடுப்பூசி போடும் தேதி வரவில்லை என புகார்? :மத்திய அரசு விளக்கம்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவின்போது ஓடிபி வராமலும், தடுப்பூசி போடும் தேதி வராமலும் சிக்கல் ஏற்பட்ட நிலையில் பின்னர் தேதி ஒதுக்கப்படும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

மே முதல் நாளில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது, உமாங் செயலிகளில் இணையவழி முன்பதிவு மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முன்பதிவுக்காகச் செல்பேசி எண்களை உள்ளிட்டபோது பலருக்கு முதலில் ஓடிபி எண் வரவில்லை என்றும், ஓடிபி எண் வந்து அதை உள்ளிட்டுப் பதிவு செய்தோருக்குத் தடுப்பூசி போடும் நாள் எது எனத் தகவல் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அரசு, தடுப்பூசி மையங்கள், இடம், நேரப் பட்டியலைத் தயாரித்த பின்பே முன்பதிவு செய்தவர்களுக்குத் தேதி ஒதுக்கப்படும் என்றும், பொதுமக்கள் தொடர்ந்து முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments