பெங்களூருவில் 3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு -அமைச்சர் அசோகா அதிர்ச்சி தகவல்

0 5905
பெங்களூருவில் 3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு -அமைச்சர் அசோகா அதிர்ச்சி தகவல்

பெங்களூருவில் 3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவாக உள்ளதாக வருவாய்துறை அமைச்சர் அசோகா தெரிவித்திருக்கும் தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது..

கர்நாடகத்தில் தினமும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ள 3000 நோயாளிகள் செல்போன்களை Switch off செய்துவிட்டு தலைமறைவாவிட்டதாக, அம்மாநில அமைச்சர் அசோகா அறிவித்துள்ளார்.

இதனால், தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நோயாளிகள் செல்போன்களை உடனடியாக ஆன் செய்யும்படி கைகூப்பி கேட்டுக்கொள்வதாக அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தலைமறைவான கொரோனா நோயாளிகளைத் தேடும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments