கோவேக்ஸின் 2வது டோஸ்..! முன்பதிவு செய்ய சென்னை மாநாகராட்சி அறிவுறுத்தல்

0 983
கோவேக்ஸின் 2வது டோஸ்..! முன்பதிவு செய்ய சென்னை மாநாகராட்சி அறிவுறுத்தல்

சென்னையில் கோவேக்ஸின் தட்டுப்பாடு காரணமாக 2வது டோஸ் செலுத்தவுள்ளோர் சென்னை மாநாகராட்சியின் இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் 2வது டோஸ் செலுத்தவரும் மக்கள் தடுப்பூசி இன்றி திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் குறைந்த அளவிலான மையங்களில் மட்டுமே கோவேக்ஸின் தடுப்பூசி கிடைப்பதால் 2வது டோஸ் செலுத்தவுள்ளோர் சென்னை மாநாகராட்சியின் இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளுமாறும், அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments