வங்கி கணக்கில் பணம் இருந்தும், மருத்துவமனையில் உடனடியாக செலுத்த பணம் இல்லை - சிகிச்சை கிடைக்காமல் கொரோனா பாதித்த பெண் உயிரிழந்த சோகம்

0 8480
வங்கி கணக்கில் பணம் இருந்தும், மருத்துவமனையில் உடனடியாக செலுத்த பணம் இல்லை - சிகிச்சை கிடைக்காமல் கொரோனா பாதித்த பெண் உயிரிழந்த சோகம்

ந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் வங்கி கணக்கில் பணம் இருந்தும், மருத்துவமனையில் உடனடியாக செலுத்த பணம் இல்லாததால், கொரோனா பாதித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட அஞ்சலியை தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

கையில் பணம் இல்லாததால் போன்பே, கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக அஞ்சலியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால், முதலில் ரொக்கமாக செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் கறாராக கூறி விட்டதால், மருத்துவமனையின் வெளியே அஞ்சலியை உட்கார வைத்துவிட்டு, பல இடங்களில் அலைந்து 3 மணி நேரத்திற்குப் பின் உறவினர்கள் பணம் கொண்டு வந்தனர்.

அதற்குள் மருத்துவமனைக்கு வெளியே அஞ்சலி பரிதாபமாக மரணமடைந்தார்.

அவருடைய உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த யாரும் முன் வராத நிலையில், அந்த வழியாக சென்ற செய்தியாளர்கள் இருவர், உறவினர்களுடன் சேர்ந்து இறுதி யாத்திரை வாகனத்தில் அவரது உடலை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments