நடுக்கடலில் மாயமான 11 மீனவர்களும் பத்திரமாக மீட்பு : மீட்க உதவிய கடற்படை, கடலோர காவல்படையினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் நன்றி

0 1744
நடுக்கடலில் மாயமான 11 மீனவர்களும் பத்திரமாக மீட்பு : மீட்க உதவிய கடற்படை, கடலோர காவல்படையினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் நன்றி

டுக்கடலில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 11 பேரை மீட்க உதவிய  கடற்படை மற்றும் கடலோர காவல்படையினருக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 11 பேருடன் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசை படகு மீது கடந்த 23-ம் தேதி கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.

கப்பல் மோதியதில் தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், அவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியாத நிலையில், கர்நாடகா கடல் பகுதியில் இருந்து மீனவர்கள் 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.

இதனிடையே கடற்படை மற்றும் கடலோர காவல் படையினருக்கு டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments