தெறிக்க விடும் கொரோனா.. சதத்தை நெருங்கும் உயிரிழப்பு..!

0 2592
தெறிக்க விடும் கொரோனா.. சதத்தை நெருங்கும் உயிரிழப்பு..!

மிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பெருந்தொற்று பலியாவோரின் எண்ணிக்கை, சதத்தை நெருங்கி உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 571 சிறுவர், சிறுமிகள், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 15,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், சென்னையை சேர்ந்த 32 பேர் உள்பட 98 பேர் உயிரிழந்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த 33 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில், மேலும் 4764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1219 பேருக்கும், கோயம்புத்தூரில் 963 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 751பேருக்கும், திருநெல்வேலியில் 714 பேருக்கும்,தூத்துக்குடியில் 594 பேருக்கும், திருப்பூரில் 493 பேருக்கும், மதுரையில் 492 பேருக்கும், திருச்சியில் 480 பேருக்கும், ஈரோட்டில் 457 பேரும், கிருஷ்ணகிரியில் 454 பேரும், காஞ்சிபுரத்தில் 443 பேருக்கும்,தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 571 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,10,308 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments