மதுபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தாய் மற்றும் 2 சகோதரர்கள் கைது

0 2714
மதுபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தாய் மற்றும் 2 சகோதரர்கள் கைது

சென்னை மாங்காடு அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் மற்றும் 2 சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு மலையம்பாக்கத்தை சேர்ந்த கோவில்ராஜ் குடி போதையில் அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்த நிலையில் நேற்றிரவும் மதுபோதையில் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது தாயும் இரு சகோதரர்களும் கோவில்ராஜ் உறங்கி கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மது போதையில் உயிரிழந்துவிட்டதாக கூறி நாடகமாடி உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலை அடக்கம் செய்தனர்.

இதனிடையே கோவில்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது நண்பர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், 3 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்களை கைது செய்த காவல்துறையினர், அடக்கம் செய்யப்பட்ட கோவில்ராஜின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments