"அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மே 1 முதல் பள்ளிக்கு வர வேண்டாம்" -பள்ளிக்கல்வி இயக்ககம்

0 2405
"அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மே 1 முதல் பள்ளிக்கு வர வேண்டாம்" -பள்ளிக்கல்வி இயக்ககம்

னைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழிக்கல்வி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வந்தனர். இந்நிலையில், வரும் 1 ஆம் தேதி முதல் வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக பல்வேறு டிஜிட்டல் மாற்று வழிகளை மாணவர்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments