5 நட்சத்திர விடுதியில் கொரோனா பராமரிப்பு மையம் கேட்கவில்லை - டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகள்

0 830
5 நட்சத்திர விடுதியில் கொரோனா பராமரிப்பு மையம் கேட்கவில்லை - டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகள்

நீதித்துறையினருக்காக ஐந்து நட்சத்திர விடுதியில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கும்படி ஒருபோதும் கூறவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதித்துறை அலுவலர்களுக்காக 5 நட்சத்திர விடுதியில் 100 அறைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கும்படி மாநில அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதைத் தானாக முன்வந்து வழக்காக எடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐந்து நட்சத்திரத் தகுதி கொண்ட கொரோனா பராமரிப்பு மையம் வேண்டும் என அரசிடம் ஒருபோதும் தாங்கள் கேட்கவில்லை எனத் தெரிவித்தனர்.

இது குறித்து விளக்கம் அளிக்க மாநிலத் தலைமைச் செயலருக்கும் சாணக்கியபுரி கோட்டாட்சியருக்கும் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments