கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநருடன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை

0 3009
கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநருடன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை

மிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி.திரிபாதி ஆகியோரும் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்காக மே-1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில், அது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments