கோவாக்சின் தடுப்பூசி இந்திய வகை உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் :அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி பேட்டி

0 1866
கோவாக்சின் தடுப்பூசி இந்திய வகை உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் :அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி பேட்டி

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இந்திய வகை உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளின் செயல்திறன் குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குக் காணொலியில் பேட்டியளித்துள்ளார்.

அதில், கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவது, இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்படுவது குறித்த தரவுகளை உற்றுநோக்கி வருவதாகத் தெரிவித்தார். இதிலிருந்து கோவாக்சின் தடுப்பூசி, பி 1 617 எனப்படும் இந்திய வகை உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments