வானில் பறக்கும்போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் ஏர்பஸ் விமானத்தை பிரான்சிடமிருந்து குத்தகைக்கு எடுக்க இந்தியா திட்டம்..!

0 1217
வானில் பறக்கும்போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் ஏர்பஸ் விமானத்தை பிரான்சிடமிருந்து குத்தகைக்கு எடுக்க இந்தியா திட்டம்..!

டுவானில் பறக்கும்போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதியுள்ள ஏர்பஸ் விமானத்தை பிரான்சிடம் இருந்து குத்தகைக்கு எடுக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட ஏர்பஸ் ஏ 330 வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரான்சிடமும், ஐக்கிய அரபு அமீரக விமானப்படையிடமும் இந்த விமானத்தைப் பெற்று இந்தியா பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் 5 ஏர்பஸ் விமானங்களை பிரான்சிடம் இருந்து குத்தகைக்குப் பெற இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய விமானப்படைத் தளபதி பதாரியா கடந்தவாரம் பிரான்சுக்குச் சென்றபோது இதுதொடர்பாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments