”தமிழகத்திற்கு 58,900 டோஸ் ரெம்டெசிவர் மருந்துகள் ஒதுக்கீடு” -மத்திய சுகாதாரத்துறை தகவல்

0 758
”தமிழகத்திற்கு 58,900 டோஸ் ரெம்டெசிவர் மருந்துகள் ஒதுக்கீடு” -மத்திய சுகாதாரத்துறை தகவல்

மிழகத்திற்கு ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை 58 ஆயிரத்து 900 ரெம்டெசிவர் டோஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவிற்கு 2 லட்சத்து 69 ஆயிரத்து 200 டோஸ்களும், உத்தர பிரதேசத்திற்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 800 டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் டெல்லிக்கு 61 ஆயிரத்து 900 ரெம்டெசிவர் டோஸ்களும் குஜராத்திற்கு 1 லட்சத்து 63 ஆயிரத்து 500 ரெம்டெசிவர் டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக 19 மாநிலங்களுக்கு 11 லட்சம் டோஸ் ரெம்டெசிவர் மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments