சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள் உரிய வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் - சென்னை மாநகராட்சி

0 1021
சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள் உரிய வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் - சென்னை மாநகராட்சி

சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள் உரிய வசதிகளுடன் கொரோனா பராமரிப்பு மையங்கள் அமைக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் தவிர்த்து, கல்வி நிலையங்கள், சமுதாயக் கூடங்களும் அரசின் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்களும் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்றும், அதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் மாநகாராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து மாநகராட்சி அதிகாரிக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பினால் மட்டும் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments