வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 1453

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழக கடலோர பகுதியை ஒட்டி வங்கக்கடலில் ஒரு வளிமண்டல சுழற்சியும், கர்நாடகாவிலிருந்து தென் கேரளம் வரை ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 5 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, அடுத்து வரும் 3 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். மேலும், கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பீட்டு ஈரப்பதம் 90சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments