3000 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள கடைகளை மூட அரசு உத்தரவு : பின்வாசல் வழியாகப் பொருட்களை விற்கும் கடைகள்

0 2931
3000 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள கடைகளை மூட அரசு உத்தரவு : பின்வாசல் வழியாகப் பொருட்களை விற்கும் கடைகள்

மூவாயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பைக் கொண்ட அங்காடிகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னை பாண்டி பஜாரில் ஒருசில அங்காடிகளில் பின்வாசல் வழியாக விற்பனை நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க 3000 சதுர அடிக்கு மேல் பரப்புக் கொண்ட அனைத்து வணிக வளாகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்துச் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெரிய அங்காடிகள் மூடப்பட்டுள்ளன.

சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டு உள்ளது. ஒரு சில கடைகளைப் பாதியளவு கதவைத் திறந்து வைத்துப் பொருட்களை விற்று வருகின்றனர்.

வேறு சில கடைகளில் முன்பக்கக் கதவுகளை மூடிவிட்டுப் பின்வாசல் வழியாகப் பொருட்களை விற்று வருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்கவே இந்த நடவடிக்கை ன்பதை உணராமல் வணிகர்களில் ஒருசிலர் இவ்வாறு விதிகளை மீறிச் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments