புதுச்சேரியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

0 3775

புதுச்சேரியில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஏப்ரல் 30 வரை அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், முன்னதாக அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொது வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஊரடங்கு 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மதுக்கடைகளும் 3 ஆம் தேதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments