மும்பையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் காத்து நின்ற மக்கள் போதிய தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றம்

0 604
மும்பையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் காத்து நின்ற மக்கள் போதிய தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றம்

மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் போதிய தடுப்பு மருந்துகள் இல்லாததால் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கொரோனாவால் அதிகப் பாதிப்புக்குள்ளான மும்பையில் பாந்த்ரா குர்லா வளாகத்தில் மிகப்பெரிய தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இன்றும் ஏராளமானோர் தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் காத்து நின்றனர். போதிய தடுப்பு மருந்துகள் இல்லை என்றும், மருந்துகள் கிடைத்தபின் தடுப்பூசி போடப்படும் என மருத்துவப் பணியாளர்கள் கூறியதை அடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments