சென்னையில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு 15 மண்டல அலுவலகங்களில் கொரோனா சோதனை

0 458
சென்னையில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு 15 மண்டல அலுவலகங்களில் கொரோனா சோதனை

சென்னையில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு 15 மண்டல அலுவலகங்களில் கொரோனா சோதனை செய்யப்படுகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் நாள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன.

ஒவ்வொரு தொகுதியின் வாக்குகளும் ஒரே நேரத்தில் 14 மேசைகளில் எண்ணப்படும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் 16 முகவர்கள், 4 மாற்று முகவர்கள் என 20 பேர் அனுமதிக்கப்படுவர்.

இந்த முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கைக்கு முன் 72 மணிநேரத்துக்குள் சோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு இன்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments