முதல் கட்டமாக ஒன்றரை கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை

0 1420

18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதற்காக முதல்கட்டமாக ஒன்றரை கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 27 ஆம் தேதி வரை, 45 வயதுக்கு மேற்பட்ட  55 லட்சத்து 51 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் வரும் மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு இலவசமாக தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென முதற்கட்டமாக ஒன்றரை கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments