சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களாக பணிபுரிய வாய்ப்பு

0 740
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களாக பணிபுரிய வாய்ப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் நாளையும், நாளை மறு நாளும் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். முடித்தோர் மருத்துவ அலுவலர் பணிக்கும், நர்சிங் முடித்தோர் செவிலியர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ அலுவலர்களுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஊதியமும், செவிலியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments