இந்தியாவில் புதிதாக 3.60 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

0 2292
இந்தியாவில் புதிதாக 3.60 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் உயிர்கொல்லி நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 3293 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 900 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. இந்தியாவில் இதுவரை பெருந்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 30 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments