கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுக்கு துணையாக மிகப்பெரிய அளவில் உதவிகள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

0 1423
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுக்கு துணையாக மிகப்பெரிய அளவில் உதவிகள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுக்கு துணையாக பெரிய அளவில் உதவிகளை அனுப்பி வைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடக்கத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்பி உதவியதை நினைவு கூர்ந்த அவர், பதிலுக்கு அமெரிக்கா உதவும் என்று உறுதியளித்தார்.

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து உடனடியாக ரெம்டிசிவர் மருந்து, மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட உதவிகளை உடனடியாக அனுப்பி வைப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ரா ஜென்காவின் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பதற்கான அனைத்துப் பொருட்களையும் அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்தியாவுக்கு நிபுணர் குழு ஒன்றை அமெரிக்கா அனுப்பி வைக்கிறது. இக்குழுவினர் மருத்துவ ஆய்வுக்கூடங்கள், மருத்துவமனைகளில் முக்கியப் பணிகளில் ஈடுபடுவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments