நடுக்கடலில் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான 11 மீனவர்களும் மீட்பு

0 1993

நடுக்கடலில் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான 11 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 11 பேருடன் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசை படகு மீது கடந்த 23-ம் தேதி கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.

உடைந்து கிடந்த படகின் ஒரு பகுதியை கண்டு அவ்வழியாக வேறொரு படகில் வந்த மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், மாயமான மீனவர்களை கடலோர காவல்படையினர் தேடி வந்தனர்.

இதனிடையே, கப்பல் மோதியதில் தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், பாதி உடைந்த படகிலேயே மீனவர்கள் 11 பேரும் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில், கப்பல் விபத்துக்குள்ளான கர்நாடகா கடல் பகுதியில் இருந்து மீனவர்கள் 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments