அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு

0 1358
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு

அசாம் மாநிலம் சோனித்புரில் இன்று காலை 7.51 மணிக்கு ரிக்டரில் 6.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

தேஸ்புர், கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏகுற்பட்டன. கட்டடங்கள் குலுங்கி வீடுகளில் இருந்த பொருட்களும் கீழே விழுந்ததால் மக்கள் பீதி அடைந்து வெளியே ஓடி வந்தனர். பல கட்டடங்கள், சாலைகளில் விரிசல் ஏற்பட்டது.

நாகான் பகுதியில் உள்ள ஒரு பெரிய கட்டடம் அருகில் உள்ள கட்டடத்தில் சாய்ந்தது. பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மேகாலயா, வடக்கு வங்காளத்திலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.

அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments