18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆன்லைன் பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும்

0 2009
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று தொடக்கம்

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இணையத்தளப் பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மே முதல் நாளில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கோவின் இணையத்தளத்தில் இன்று முதல் பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. நள்ளிரவுக்குப் பிறகு பதிவு செய்யப் பலர் முயன்றும் முடியவில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில், கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது செயலி, உமாங் செயலி ஆகியவற்றின் மூலம் இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments