கர்நாடகத்தில் நேற்றிரவு அமலுக்கு வந்தது 14 நாள் முழு ஊரடங்கு

0 5729

கர்நாடகத்தில் 14 நாள் முழு ஊரடங்கு நேற்றிரவு அமலுக்கு வந்தது.

இதையடுத்து அனைத்துக் கடைகள் ,வணிக வளாகங்கள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடியிருந்தன. அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், மளிகைக் கடைகள் போன்றவற்றை காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்பனை செய்யலாம் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளர்.

முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலபுருகி போன்ற நகரங்களில் போலீசார் சாலைத் தடுப்புகளை அமைத்து விதிமீறும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பேருந்துகள் நிறுத்தப்பட்டதால்
பெங்களூர் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் காத்துக் கிடந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments