வீடியோ கால் காதல்... வீதியில் இறங்கிய லோக்கல் பாகுபலிகள்..! சைட் அடித்தவருக்கு தர்ம அடி

0 5006
வீடியோ கால் காதல்... வீதியில் இறங்கிய லோக்கல் பாகுபலிகள்..! சைட் அடித்தவருக்கு தர்ம அடி

கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசி, அதனை பதிவு செய்து வைத்துக் கொண்டு ஆசைக்கு இணங்க வற்புறுத்திய தண்ணீர் கேன் போடும் இளைஞருக்கு உறவினர்கள் ஒன்று கூடி தர்ம அடி கொடுத்த சம்பவம் நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்துள்ளது

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள அவரை குளத்தைச் சேர்ந்தவர் ஜெகன். வீடு வீடாக தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வந்த இவரை வீடு தேடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அடித்து உதைத்தது.

ஜெகனை காப்பாற்ற வந்த அவரது உறவினர்களுக்கும் பாரபட்சமில்லாமல் தர்ம அடி விழுந்தது. அந்த உள்ளூர் பாகுபலிகள் எதற்கு அடிக்கிறார்கள்? ஏன் அடிக்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்பதற்குள்ளாக மண்வெட்டியால் ஓங்கி விழுந்த ஒற்றை அடியில் ஒருவர் மூர்ச்சையாகி கீழே விழ அடித்த கும்பல் இரக்கப்பட்டு அங்கிருந்து எச்சரித்தபடியே விலகிச்சென்றது.

இந்த களேபாரத்தை பயன்படுத்திக் கொண்டு முதல் இன்னிங்ஸில் தர்ம அடி வாங்கிய ஜெகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உறவினர்கள் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில் அடித்தவர்களின் வீட்டு பெண்ணுக்கு ஜெகன் செய்த வீடியோ கால் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அதே ஊரை சேர்ந்த சதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் அவரது வீட்டிற்கு தண்ணீர் கேண் போடச்சென்ற ஜெகன், வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, செல்போன் நம்பரை பெற்று பழக்கத்தை நெருக்கமாக்க திட்டமிட்டுள்ளான்.

அதன்படி அந்த பெண்ணின் எண்ணுக்கு அடிக்கடி வீடியோ கால் மூலம் காதல் மொழி பேச தொடங்கிய ஜெகன், அந்த பெண் பேசிய அந்தரங்க தகவல்களை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளான். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்துள்ளான் ஜெகன்.

இந்த நிலையில் ஊருக்கு திரும்பிய கணவர் சதீஷ்குமாரிடம் இதனை அந்த பெண் தெரிவிக்க, அவர் மூலமாக வீடியோ கால் விவகாரம் பெண்ணின் குடும்பத்தாரின் காதுகளையும் எட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் சகோதர்கள் மற்றும் தந்தை உள்ளிடோர் சென்று முதலில் ஜெகனுக்கு பூஜை வைத்துள்ளனர்.

அடுத்ததாக அவனுக்கு ஆதரவாக வந்த ஜெகனின் உறவினர்களையும் பெண் வீட்டார் புரட்டி எடுத்தது தெரியவந்தது.

வழக்கமாக வீடியோ கால் வில்லன்களிடம் சிக்கிக் கொள்ளும் பெண்கள் தங்களுக்கு அவமானம் என்று பயந்து அமைதிகாப்பதால், பிளாக்மெயிலர்கள் நினைத்தையெல்லாம் சாதிப்பார்கள். ஆனால், இந்த சம்பவத்தில் பெண்வீட்டார் கொடுத்த அடியில் ஜெகனின் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகின்றது.

பெண்கள் சம்பந்தமில்லா நபரிடம் தங்கள் குடும்ப அந்தரங்கங்களை வீடியோ காலில் பகிர்ந்தால் என்ன மாதிரியான விபரீதத்தில் கொண்டு விடும் என்பதை உணரவேண்டும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments