கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு 450 டன் திரவ ஆக்சிஜன் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது: இந்திய ரயில்வே

0 4473
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு 450 டன் திரவ ஆக்சிஜன் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது: இந்திய ரயில்வே

கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களுக்கு 450 டன் திரவ ஆக்சிஜன் ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவுவதால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உற்பத்தி ஆலைகளில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை விரைவாக எடுத்துச் செல்ல ”ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” என்றழைக்கப்படு 6 பிரத்யேக ரயில்களை ரயில்வேத்துறை அறிமுகப்படுத்தியது.

பத்தாயிரம் கிலோமீட்டருக்கு மேல் பயணித்துள்ள இந்த ரயிகள் மூலம் தலைநகர் டெல்லிக்கு 70 டன்னும், உத்தர பிரதேசத்துக்கு 202 டன்னும், மராட்டியத்துக்கு 174 டன் திரவ ஆக்சிஜனும் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments