மதுரை அருகே முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆம்னி வேனில் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு

0 2533
மதுரை அருகே முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆம்னி வேனில் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு

துரை மாவட்டம் திருமங்கலம் அருகே முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆம்னி வேன் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

திருமங்கலத்தை சேர்ந்த அபுபக்கர் பிரசவத்திற்காக வந்திருந்த தனது மூத்த மகளை கணவர் வீட்டில் கொண்டு விடுவதற்காக ஆம்னி வேனில் சிவாகாசிக்கு சென்றுகொண்டிருந்தார்.

கள்ளிக்குடி அருகே சென்றுகொண்டிருந்த போது, விருதுநகரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்த ஹுண்டாய் காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பை தாண்டி எதிரே வந்த ஆம்னி வேனில் மோதியது.

இதில் ஆம்னி வேனில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட 5 சம்பவ உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments