காவல்துறையினரின் நடவடிக்கையால் மனமுடைந்து தீக்குளித்து உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை

0 1165
காவல்துறையினரின் நடவடிக்கையால் மனமுடைந்து தீக்குளித்து உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை

காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரின் நடவடிக்கையால் மனமுடைந்து தீக்குளித்த பெண்ணின் கணவருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னையை அடுத்த திருவேற்காடு செந்தமிழ் நகரை சேர்ந்த கஜேந்திரன் தனது இடத்தில், கழிப்பறை கட்டியதாக அவரது பக்கத்துவீட்டுக்காரர் அமிர்தவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணைக்கு ஆஜரான கஜேந்திரன் மனைவி ரேணுகா பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஆய்வாளர் அலெக்ஸாண்டரும்,உதவி ஆய்வாளர் சரவணனும் அவதூறாக கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரேணுகா காவல்நிலையத்தின் முன்பே தீக்குளித்து உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments