மதுபோதையில் போலீஸ் ஜீப்பை திருடிச்சென்று விபத்தை ஏற்படுத்திய இளைஞர்..

0 6066
திருப்பூரில், மதுபோதையில் போலீஸ் ஜீப்பை திருடிச்சென்று விபத்தை ஏற்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில், மதுபோதையில் போலீஸ் ஜீப்பை திருடிச்சென்று விபத்தை ஏற்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகர பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இளைஞர் ஒருவர் போலீசாருக்கு தெரியாமல் ஜீப்பை திருடிச்சென்றான்.

போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்த நிலையில், கூலிபாளையம் அருகே லாரியின் மீது ஜீப்  மோதி விபத்துக்குள்ளானது. அந்த இளைஞரை மீட்டு சிகிச்சை அளித்த போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த இளைஞர்  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயன் என்பதும், மதுபோதையில் ஜீப்பை திருடிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments