உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயின் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்ற ஓட்டுநர்கள் மறுத்ததால் நண்பர் உதவியுடன் பைக்கில் கொண்டு சென்ற மகன்

0 1382
உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயின் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்ற ஓட்டுநர்கள் மறுத்ததால் நண்பர் உதவியுடன் பைக்கில் கொண்டு சென்ற மகன்

ந்திராவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை கொரோனா அச்சத்தின் காரணமாக ஆம்புலன்சில் கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுத்து விட்டதால், நண்பர் உதவியுடன் பைக்கில் தாயின் சடலத்தை ஏற்றி மகன் கொண்டு சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

சிகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த செஞ்சுலா, உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் இருந்து அவரது உடலை தனது சொந்த ஊரான கில்லோய் கிராமத்திற்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை அவரது மகன் அழைத்தார்.

ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் செய்வதறியாமல் தனது பைக்கிலேயே தாயின் சடலத்தை நண்பருக்கு மத்தியில் பைக்கில் அமர வைத்து சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். போலீசாரும் இதனை பார்த்து கண்டு கொள்ளாமல் அனுப்பி வைத்தனர்.

இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகிறது. மனிதாபிமானம் எங்கு சென்றது என்று பலர் பதிவு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments