ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் விவகாரம்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1287

ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் மோடி உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில்,  ஆக்சிஜன் தேவை இனி வரும் நாட்களில் அதிகரிக்கும்.

எனவே தமிழகத்தின் முழுத் தேவையை நிறைவேற்றிய பிறகு, மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அளித்திடுவதே சரியான வழிமுறையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்த பின்னர் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments