கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..!

0 2506
கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..!

சென்னையில் பல தடுப்பூசி மையங்களில் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

ஒவ்வொரு தடுப்பூசி மையங்களுக்கும் 100 முதல் 150 டோஸ்கள் வரை மட்டுமே இரண்டாம் தவணை கோவேக்சின் தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன. காலை 7 மணிக்கே தடுப்பூசி மையங்களுக்கு வந்து காத்திருக்கும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி அவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒன்பது மணிக்கு பிறகு வருபவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு குறைவான எண்ணிக்கையில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கிடைப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments