55 வயது மேற்பட்டவர்களை 100 நாட்கள் வேலையில் பணியமர்த்தத் தடை - தமிழ்நாடு அரசு

0 3503
55 வயது மேற்பட்டவர்களை 100 நாட்கள் வேலையில் பணியமர்த்தத் தடை - தமிழ்நாடு அரசு

55 வயதுக்கு மேற்பட்ட நபர்களை 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், சளி, இருமல், மூச்சு பிரச்னைகள், இதய சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களை நூறுநாள் வேலை திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது எனவும், பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், உணவுப் பொருட்களை பரிமாறக் கூடாது, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments