அமெரிக்காவிடம் இருந்து தடுப்பூசிகளை வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுக்கவில்லை - பைடன் அரசின் மூத்த அதிகாரி

0 2725
அமெரிக்காவிடம் இருந்து தடுப்பூசிகளை வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுக்கவில்லை என்று பைடன் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடம் இருந்து தடுப்பூசிகளை வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுக்கவில்லை என்று பைடன் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று அமெரிக்க எம்பிக்கள் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆக்சிஜன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் மட்டுமே வழங்குவதற்கு இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments