ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் ஊழியர்களின் கோரிக்கையை 12 வாரங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0 1736

ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க கோரி  தாக்கலான வழக்கில், கோரிக்கையை 12 வாரங்களில் மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கின்போது தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை  என கூறி பொதுநல மனு தாக்கலானது. 

தற்போது இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருப்பது  தனியார் ஊழியர்களின் ஊதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments