கொரோனா முன்களப்பணியாளராக களமிறங்கியுள்ள தனது மகளை பாராட்டிய மத்திய அமைச்சர்

0 2596
கொரோனா முன்களப்பணியாளராக களமிறங்கியுள்ள தனது மகளை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டியுள்ளார்.

கொரோனா முன்களப்பணியாளராக களமிறங்கியுள்ள தனது மகளை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டியுள்ளார்.

கொரோனா பாதுகாப்பு உடையுடன் இருக்கும் மகள் திஷாவின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்த தருணத்திற்காகவே காத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

என் மகள், என் பெருமை!  என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடமையாற்றும் மகளை கண்டு பெருமிதம் அடைவதாகவும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

கொரோனாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள தனது மகளுக்கு அதனை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும் என்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments