மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...

0 9976
மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருடம்தோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே விழா நடைபெற்றது.

கள்ளழகர்பெருமான் வைகை ஆற்றில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு, கோவில் வளாகத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட தாமரை தடாகம் போன்ற அமைப்பில் நடைபெற்றது. இந்த ஆண்டு பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

யூடிப்பில் அந்த நிகழ்ச்சி நேரலையும் செய்யப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கோவில் பணியாளர்கள் மட்டுமே விழாவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்வில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பொழுது பக்தர்கள் சர்க்கரை கிண்ணங்களில் தீபங்களை ஏற்றி கள்ளழகருக்கு பெருமானுக்கு தீபாராதனை காட்டுவார்கள். இந்த ஆண்டு கோவில் வளாகத்தின் வெளியே அமைந்துள்ள கள்ளழகரின் சிலையின் முன்பு அதிகமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் சென்றனர். தண்ணீர் பீய்ச்சக்கூடிய பக்தர்கள் ஒரு சிலர் மட்டுமே கள்ளழகர் வேடம் தரித்து தண்ணீர் பைகளை கொண்டுவந்து அந்த பீய்ச்சி அடித்தனர்.

முடி காணிக்கை செலுத்தக்கூடிய பக்தர்களும் கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள சிலையை மட்டுமே வணங்கி காணிக்கை செலுத்தினர். நேரடியாக கள்ளழகர் பெருமானை தரிசிக்க இயலாத பெரும் மன வருத்தமாக கருதுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கியதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments