தமிழகத்தில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை - தேர்தல் ஆணையம்

0 2608
கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

இது தொடர்பாக அவ்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, மே 2ம் தேதி நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதும், வாக்கு எண்ணிக்கை முடிந்து அறிவிப்புகளை வெளியிடும் போதும், இனிப்பு  வழங்கி, பட்டாசு வெடித்து எவ்வித வெற்றிக் கொண்டாட்டங்களில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது என்றும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் இருவர் மட்டுமே சென்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments