இந்தியாவில் ஒரே நாளில் 3.23 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று.. 2,771 பேர் பலி

0 2394
கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சத்தை கடந்து நிற்கிறது.

கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சத்தை கடந்து நிற்கிறது.

நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2 ஆயிரத்து 771  பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகினர். இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்டவர்கள்  கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தற்போது  28 லட்சத்து 82 ஆயிரத்து 204  பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மொத்த இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.

நேற்று இரவு நிலவரப்படி 14 கோடியே 52 லட்சத்து 71 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments