உலகிலேயே ராணுவத்திற்கு அதிகம் செலவழிக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 3ம் இடம்

0 1437
உலகிலேயே ராணுவத்திற்கு அதிகம் செலவழிக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 3ம் இடம்

லகிலேயே ராணுவத்திற்கு அதிகமாகச் செலவிடும் நாடுகளில் இந்தியா 3ம் இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா 778 பில்லியன் டாலர்களும், சீனா 252 பில்லியன் டாலர்களும் செலவழிப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான சிப்ரியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 72 புள்ளி 9 பில்லியன் டாலர்களுடன் 3ம் இடத்தில் இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதன் பின்னரே ரஷ்யா, இங்கிலாந்து, சவுதி ஆகிய நாடுகள் இருப்பதாகக் கூறியுள்ள சிப்ரி, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னையால் 15 லட்சம் வீரர்களுக்கு தேவையான ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments