காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

0 965
காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குல்காம் மாவட்டத்தின் அகர்பால் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இயைடுத்து ராணுவம், போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது இயந்திரத் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ஏகே 47 ரக துப்பாக்கிகளின் தோட்டாக்கள். கையெறி குண்டுகள், படுக்கை விரிப்புகள், தொழில் பாதுகாப்புப் படையின் ஆடைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் கையெறி குண்டுகள் வைத்திருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments